News April 6, 2024
நெல்லை: 2 நாள் பிரச்சாரத்திற்கு அழைப்பு

திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக இன்று (ஏப்.6) மற்றும் நாளை (ஏப்.7) என இரு நாட்கள் பாளை சட்டமன்ற தொகுதிகளில் பாளை எம்எல்ஏ அப்துல் வஹாப் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க எம்எல்ஏ அப்துல் வஹாப் நேற்று (ஏப்.5) இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News February 14, 2026
நெல்லை மக்களுக்கான இலவச சட்ட உதவி Whatsapp எண்!

நெல்லை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் 72177 11814 என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News February 14, 2026
நெல்லை : ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் திருச்சி மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். இதை அனைவருக்கும்SHARE பண்ணுங்க!
News February 14, 2026
நெல்லை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

நெல்லை- மும்பை எல்டிடி இடையே இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில்களில் பயணிகள் வசதிக்காக நிரந்தரமாக 6 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. நெல்லை (22630) மார்க்கத்தில் ஏப்ரல் 15ம் தேதி முதலும் மும்பை- நெல்லை ரயிலில் (22629) ஏப்ரல் 16ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போது 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இனி 22 பெட்டிகளுடன் இயக்கப்படும். இதனால் கூடுதல் பயணிகள் செல்ல முடியும்


