News May 2, 2024
நெல்லை: 103 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா தலைமையில் மே தின விடுமுறை நாளில் திடீர் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 103 நிறுவனங்களில் மே விடுமுறை தின சட்டத்தை அமல்படுத்தாமல் இருந்தது தெரியவந்தது. இதை அடுத்து உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
சந்திப்பு ரயில் நிலையத்தில் வடமாநில நபர் வெறிச்செயல்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் நேற்றிரவு பாண்டிதுரை(29) என்பவர் 4வது நடைமேடையில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது வட மாநில வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் பாண்டித்துரையை தாக்கினார். தொடர்ந்து அந்த வாலிபர் அங்கு நின்று கொண்டிருந்த மேலும் 2 பேரை கம்பியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றார். 3 பேரை போலீசார் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தப்பிய ஓடிய வடமாநில நபரை போலீஸ் தேடுகிறது.
News September 17, 2025
நெல்லை: துணை தாசில்தார் 11 பேர் பணியிடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் துணை தாசில்தார் நிலையில் உள்ள 11 பேரை இடமாற்றம் செய்து கலெக்டர் சுகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி நெல்லை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் புவனேஸ்வரி கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், நெல்லை டவுன் தண்ணி தாசில்தார் ரேகலா கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், நெல்லை கலெக்டர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் அனந்தபத்ரா தலைமை உதவியாளராகவும் மாற்றம்.
News September 17, 2025
நெல்லை: வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு!

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாதாந்திர தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 19ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு சிதம்பர நகரில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முகாம் தொடங்கும். விருப்பமுள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி விளையாட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க