News August 29, 2025
நெல்லை: 1.5 இலட்சம் வரை சம்பளம்!

நெல்லை மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய<
Similar News
News September 1, 2025
பணகுடியில் பொதுமக்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பீலா கோட்டைபாறையில் 2 பேர் விபத்தில் பலியானதை தொடர்ந்து பணகுடிக்கும் வள்ளியூருக்கும் இடையே தெற்கு வள்ளியூர் நான்கு வழி சாலை சந்திப்பில் விபத்து ஏற்படுத்தும் பகுதியில் மேம்பாலம் அமைக்க கோரி 5 கிராம பொதுமக்கள் சாலை இன்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பணகுடி காவல் ஆய்வாளத்தில் ராஜாராம் மற்றும் காவல்துறையினர் நெடுஞ்சாலை துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
News September 1, 2025
நெல்லை – பெங்களூரு சிமோகா ரயில் 2 மாதம் நீடிப்பு

சுதந்திரதினத்தை முன்னிட்டு நெல்லையிலிருந்து பெங்களூரு சிமோகா விற்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு தென் மாவட்ட பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த ரயில் மேலும் இரு மாதங்களுக்கு வாராந்திர ரயிலாக இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 3.40 மணிக்கு நெல்லையில் புறப்படும் மறுமார்க்கத்தில் திங்கட்கிழமைகளில் பிற்பகல் 2:30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
News September 1, 2025
மனோன்மணியம் பல்கலை இன்று முதல் செயல்படும்

அபிஷேக பட்டியில் உள்ள MSபல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 29ம் தேதி மாணவர்கள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பு மாணவர்கள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்கள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து பல்கலைக்கழக வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது. இந்த நிலையில் இன்று முதல் வகுப்புகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கபட்டது.