News September 27, 2025

நெல்லை: ஹெலிக்காப்டரில் செல்ல ஆசையா?

image

பெங்களூருவை சேர்ந்த தனியார் நிறுவனம், நெல்லையில் நாளை மாலை 5 மணி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தச்சநல்லுார் அருகே மைதானத்தில் இருந்து புறப்பட்டு டவுன், நெல்லையப்பர் கோவில் பகுதி, தாமிரபரணி ஆறு என, 10 நிமிடங்கள் சுற்றிக்காட்டப்படடும். ஒரு நபருக்கு, 6,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வானத்தில் பறந்தவாறு நம்ம ஊரின் அழகை ரசிக்க உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்க.

Similar News

News January 27, 2026

நெல்லை: ரூ.6 செலுத்தினால் ரூ.1 லட்சம் கிடைக்கும்

image

நெல்லை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். ( நல்ல தகவலை SHARE பண்ணுங்க)

News January 27, 2026

நெல்லை: பட்டப்பகலில் 3 வீடுகளில் திருட்டு

image

பாளையங்கோட்டை அருகே கிருபாநகரை சேர்ந்த மனோரஞ்சிதம் என்பவர் வீட்டில் பீரோவில் இருந்த ரூ.70,000 ரொக்கத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. அதே போல் பக்கத்து வீட்டை சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் வீட்டில் ரூ.7000, மற்றொருவர் வீட்டில் ரூ.15000, 6 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் திருட முயன்றதும் தெரியவந்துள்ளது.

News January 26, 2026

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று (ஜன.26) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சுரேஷ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!