News June 14, 2024

நெல்லை: வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட தொழில்நெறி வழி காட்டு மைய உதவி இயக்குனர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார். காலை 10:30 மணிக்கு தனியார் துறையினர் பங்கேற்கும் இந்த வேலை வாய்ப்பு முகாமில், விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி மற்றும் பிற சான்றுகளுடன் பங்கேற்று பயன்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 27, 2025

நெல்லை: உங்க நிலத்தை காணமா??

image

நெல்லை மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக்<<>> பண்ணி LOGIN செய்து நெல்லை மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News August 27, 2025

நெல்லையில் நகையை விழுங்கிய ஊழியர்

image

வி.கே.புரத்தை சேர்ந்தவர் சுப்பம்மாள்(70). இவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை, கொக்கிரகுளம் பகுதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை ஆஸ்பத்திரி ஊழியர் ராமர் (25) திருடினார். உடனே சுப்பம்மாள் சத்தம் போடவே என்ன செயவதென்று தெரியாமல் நகையை விழுங்கியுள்ளார். ஆஸ்பத்திரியில் ராமருக்கு இனிமா மருந்து கொடுத்து நகை வெளியில் எடுக்கப்பட்டது. இதுக்குறித்து பாளை போலீசார் விசாரணை.

News August 27, 2025

டாஸ்மாக் பாரில் 17 ஆயிரம் பணம் கொள்ளை

image

மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.நேற்று இரவு கடையில் விற்பனை முடிவடைந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாரை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் பாரை திறப்பதற்கு ஊழியர்கள் சென்ற போது கதவு உடைக்கப்பட்டு 17,000 ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது. இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.

error: Content is protected !!