News June 4, 2024
நெல்லை: வெளியேறினார் நயினார் நாகேந்திரன்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருவதை தொடர்ந்து நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சுமார் 40,000 வாக்குகளுக்கும் கீழே பின்தங்கியதால் உடனடியாக நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து அவசர அவசரமாக வெளியேறினார். இதனால் அங்கு பாஜக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் இடையே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Similar News
News July 7, 2025
நெல்லை: ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்த வாலிபர்

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி அருகே மேல பாலாமடையைச் சேர்ந்த ஆறுமுக கனி (33), டிரைவரான இவர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் ரூபாய் இழந்து கடனில் சிக்கினார். இதனால் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை.07) அதிகாலை உயிரிழந்தார்.
News July 7, 2025
நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/1)

தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2,299 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில். நெல்லைக்கு 45 காலிப் பணியிடங்கள் உள்ளது. விண்ணப்பிக்க ஆகஸ்ட் 4 கடைசி நாளாகும். இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தமிழில் எழுத/படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாத சம்பளம்: ரூ.11,100 முதல் 35,100 வரை வழங்கப்படும். சைக்கிள்/ டூவீலர் ஒட்டத் தெரிந்தால் கூடுதல் மதிப்பெண். <<16974235>>மேலும் அறிய<<>>
News July 7, 2025
நெல்லை: கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு (1/2)

▶️விண்ணப்பதாரர்களுக்கு திறனறிவு தேர்வு, நேர்காணல் ஆகியவை நடத்தப்படும்.
▶️அனைவரும் கட்டாயம் 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
▶️மேலும், தேர்வர்கள் அப்பகுதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
▶️ விவரங்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அருகேயுள்ள தாலுகா அலுவலகத்தை நேரில் அணுகலாம்.