News April 25, 2025
நெல்லை வெற்றிகரமாக நடக்கும் அறுவை சிகிச்சை

திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையில் Dual Chamber Pacemaker அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்றும் தற்போது வரை 25 நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன் இன்று (ஏப்.25) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை 25 தடவை இந்த அறுவை சிகிச்சை, நெல்லை அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News April 26, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கு கலெக்டர் அட்வைஸ்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் போதை பொருள் தடுப்பு செயலியின் பயன்பாடுகளை அதிகரிக்க தேவையான விழிப்புணர்வு குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் சுகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், ஆட்சியர், ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
News April 25, 2025
இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.25] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பொன் ரகு இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News April 25, 2025
அரசு பேருந்துடன் மினி லொடு வேன் மோதி விபத்து

திசையன்விளையில் இருந்து நவ்வலடி நோக்கி அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது நவ்வலடியிலிருந்து திசையன்விளை நோக்கி வந்த மினி லோடு வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மினி லோடி வேன் சாலையில் கவிழந்தது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.