News December 21, 2025

நெல்லை: வீடு புகுந்து நகை திருட்டு!

image

களக்காடு அருகே ஆதிச்சபேரி தெற்கு தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை அன்னமணி (77). திருமண வீட்டிற்கு சென்று திரும்பிய பின், ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கச்சங்கிலி மற்றும் 3 வளையல்களை ஏழரை பவுன் நகைகளை பர்சில் வைத்துவிட்டு தோட்டத்திற்கு சென்றார். திரும்பி வந்தபோது பர்ஸ் காணாமல் போனது. வீடு புகுந்த மர்ம நபர்கள் திருடியதாக அன்னமனி புகார் அடிப்படையில், களக்காடு போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 24, 2025

நெல்லை: போஸ்ட் ஆபீஸில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பம்!

image

தமிழகத்தில் அனைத்து தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல் மற்றும் ஆதார் அட்டை புதுப்பித்தல் போன்ற சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை நெல்லையிலும் உள்ளது. தகுதியானவர்கள் அஞ்சல் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என நெல்லை முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சார்பில் முன்னர் தெரிவிக்கப்பட்டது. SHARE IT

News December 24, 2025

நெல்லை: பணப் பறிப்பில் ஈடுபட்டவர் குண்டாஸில் கைது

image

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் மகாராஜன் என்பவரை பாளை இரயில் நிலையத்தில் மிரட்டி, பணம் பறித்துள்ளார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறி அன்பழகன் நேற்று போலீஸ் கமிஷனர் சந்தோஸ் ஹாதிமணி உத்தரவில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 24, 2025

நெல்லை மாவட்டத்தில் மாடு வளப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பசு மற்றும் எருமை இனங்களை கால் நோய் மற்றும் வாய் நோய் அதிகம் தாக்குவதால் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் எட்டாவது சுற்று கால்நோய் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி நடைபெற உள்ளது. இந்த முகாமானது வருகிற டிச 29ம் தேதி முதல் ஜன 28ம் தேதி வரை 30 நாள்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!