News September 17, 2025

நெல்லை: விஷவாயு தாக்கி ஒருவர் பலி..!

image

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 17, 2025

நெல்லை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 17, 2025

நெல்லை – சென்னை வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு

image

தசரா பண்டிகை தீபாவளி முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 26 மற்றும் அக்.3, 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12:30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறு மார்க்கத்தில் நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது.

News September 17, 2025

நெல்லையில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகே அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி பல்வேறு கட்சிகள் சார்பில் காலை 9 மணி முதல் நடைபெறுகிறது.
காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சுகுமார் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
திருநெல்வேலி சந்திப்பு சாலை குமரன் கோயிலில் இரவு 7:00 மணிக்கு மண்டல பூஜை நடக்கிறது.

error: Content is protected !!