News October 6, 2025

நெல்லை: விவசாயியை தாக்கிய கரடி

image

நெல்லை, அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி மிக்கேல் என்பவரது மகன் ஆரோக்கியம் நேற்று இரவு இந்திரா காலணியில் இருந்து வீட்டிற்கு வரும்போது மலையடிவாரப் பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி தாக்கியதில் ஆரோக்கியம் காயம் அடைந்தார். கரடியை பிடிக்க வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News

News October 6, 2025

நெல்லை: வெங்காயம் விலை எகிறியது!

image

நெல்லையில் ஒரு வாரம் முன்பு வரை சின்ன வெங்காயம் கிலோ 20 ரூபாய்க்கு தரமான வெங்காயம் மற்றும் பல்லாரி கிடைத்தது. கடந்த வாரம் சில இடங்களில் ரூ.100க்கு 5 கிலோ பல்லாரி, சின்ன வெங்காயம் என கூவி அழைத்து விற்றனர். தீபாவளி நெருங்கும் நிலையில் தற்போது முதல் ரக சின்ன வெங்காயம் இன்று ரூ.60 முதல் 70 ரூபாயை கடந்து விட்டது. அதே நேரம் தரம் குறைந்த சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.25 விலையில் விற்கப்படுகிறது.

News October 6, 2025

நெல்லை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

நெல்லை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <>கிளிக்<<>> செய்து மானியத்துக்கு பதிவு செய்யுங்க. உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க.. ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குல.. இதை எல்லோர்க்கும் SHARE பண்ணுங்க..

News October 6, 2025

நெல்லை: ஹெலிகாப்டர் ரைடு – லட்சம் வரி

image

நெல்லை, தச்சநல்லூர் மண்டல பகுதியில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் கடந்த வாரம் பெங்களூரை சேர்ந்த நிறுவனம் ஹெலிகாப்டர் ரைட் நடத்தியது. தினமும் 30 முறை 4 பயணிகள் வீதம் அனைத்து செல்லப்பட்டனர். ஒரு பயணிக்கு 6 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் ரைடுக்காக அந்த நிறுவனம் ஆறு நாட்கள் ரெய்டு முடிந்ததும் மாநகராட்சிக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு வரி செலுத்தியதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

error: Content is protected !!