News April 14, 2025
நெல்லை: விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு, தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய விவசாய அட்டை பதிவிற்கான தேதி நாளையுடன் (15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். பதிவு செய்ய முடியவில்லை எனில் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளவும். *SHARE*
Similar News
News April 24, 2025
+2 கணினி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு

நெல்லையில் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் உதவியாளர், கணினி இயக்குபவர் காலி இடத்திற்கு 1 வருட ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில் +2 தேர்ச்சி மற்றும் கணினி படிப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தை tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே.6 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என ஆட்சியர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
News April 24, 2025
நெல்லை- மும்பை கோடை ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை வழியாக கன்னியாகுமரி – மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மே.8 முதல் ஜூன்.26 வரை வியாழக்கிழமை தோறும் பகல் 1:30 மணிக்கு குமரியில் புறப்படும். மறு மார்க்கத்தில் புதன்கிழமை தோறும் மே.7 முதல் ஜூன்.25 வரை மும்பையில் இருந்து புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
News April 24, 2025
நெல்லையில் மின்சேவை எண்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மாலை, இரவு நேரங்களில் கோடை மழை அவ்வப்போது இடி மின்னலுடன் பெய்வதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என நெல்லை மின்வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல், மழையின் போது மின்மாற்றிகள், மின்சாதனங்கள் மற்றும் மரங்களின் கீழ் நிற்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மின் சேவைக்கு 9445859032, 9445859033, 9445859034 எண்களை தொடர்பு கொள்ளலாம்.