News October 23, 2025

நெல்லை: வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் சேர்ந்தவர் தங்கையா. இவர் களக்காடு அருகே சொந்தமாக இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் இறைச்சி கடைக்கு தனது இருசக்கர வாகனத்தில் தங்கையா சென்றுள்ளார். அப்பொழுது இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த தங்கையாவை நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தங்கையா பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News October 23, 2025

நெல்லை: டூவிலர் மோதி தொழிலாளி உயிரிழப்பு

image

பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவியுடன் புலவன் குடியிருப்பில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது நண்பருடன் இடையன்குளம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பத்தமடை வடிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் மோதியதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 23, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் பொழிந்த மழையளவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பொலிந்த மழை அளவு அம்பாசமுத்திரம்- சேரன்மகாதேவி 7.40, மணிமுத்தாறு 0.80, நாங்குநேரி 5.00, பாளையங்கோட்டை- ராதாபுரம் 7.00, பாபநாசம் 4.00, திருநெல்வேலி 2.00, சேர்வலாறு அணை1.00, கனடியன் அணைக்கட்டு – களக்காடு 2.60, கொடுமுடியாறு அணை 9.00, மூலக்கரைப்பட்டி 1.00, நம்பியார் அணை 3.00, மாஞ்சோலை 4.00, காக்காச்சி 46.00, நாள் மூக்கு 52.00, உத்து 66.00 ஆகிய அளவுகளில் பதிவாகியுள்ளது.

News October 23, 2025

நெல்லை: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை.,

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <>கிளிக் செய்யவும்<<>>. இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!