News October 3, 2025

நெல்லை வழியாக செல்லும் ரயில்; நாளை மாற்று பாதை

image

நாகர்கோவில்-கோயம்புத்தூர் எக்ஸ்பிரஸ் (16321) நாளை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, நெல்லை, விருதுநகர் வழியாக திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயில் திருமங்கலம், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நிலையங்களைத் தவிர்க்கும். அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையில் தற்காலிக நிறுத்தம் உண்டு.

Similar News

News October 3, 2025

நெல்லையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

image

கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் விடுத்துள்ள செய்தி குறிப்பில்; கல்லிடைக்குறிச்சி கோட்டம், வீரவநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (4-10-25) காலை மணி 9 முதல் மாலை 5 வரை மற்றும் ஓ.துலுக்கப்பட்டி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும். *ஷேர் பண்ணுங்க

News October 3, 2025

நெல்லை: 2 ஆண்டுகளில் 200 கைதிகளுக்கு சிகிச்சை

image

சமூக ஆர்வலர் மகாராஜன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் படி கடந்த 2023 முதல் 25 ஆம் ஆண்டு வரை நெல்லை அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தெரியவந்துள்ளது. 18 வயது முதல் 28 வயதுடைய கைதிகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

News October 3, 2025

நெல்லை: தசரா திருவிழா 100 பேருந்துகள் இயக்கம்

image

திருநெல்வேலியில் இருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவிற்காக 100 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் நெரிசலின்றி பயணிக்க, போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

error: Content is protected !!