News December 17, 2025
நெல்லை: வரதட்சனை கொடுமை; கணவர் கைது

நெல்லையை சேர்ந்த செந்தில்முருகனின் மகளுக்கும் செந்தில்வேல் என்பவருக்கும் கடந்தாண்டு டிச.5-ல் திருமணம் நடந்தது. 10 பவுன் நகை, ரூ.10,000 ரொக்கம், பொங்கல் சீராக ரூ.50,000 பொருட்கள் கொடுத்தும் கணவன் செந்தில்வேல், தாய் லட்சுமி, சகோதரி பத்மா, மைத்துனர் முருகேஷ் ஆனந்த் ஆகியோர் பெண்ணை வரதட்சணை கேட்டு உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தினர். தந்தை புகாரின் பேரில் செந்தில் வேல் -ஐ போலீசார் கைது செய்தனர் .
Similar News
News December 19, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன், தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று ( டிச.18) இரவு ரோந்து பணிகளில் செந்தாமரை ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கண்ணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.
News December 18, 2025
நெல்லை – தாம்பரம் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் எண்: 06166 வருகிற 28ம் தேதி மற்றும் ஜனவரி 4ம் தேதி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் இரவு 11:30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்படும். மறு மார்க்கத்தில் தாம்பரம் சென்னை சிறப்பு ரயில் எண் 06165 தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 5ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 18, 2025
நெல்லையில் மின்தடை சேவை அழைப்பு எண்கள்!

நெல்லை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறதா? கரண்ட் எப்ப வரும்ன்னு தெரியலையா? இனி அடிக்கடி மின்தடை ஏற்பட்டால் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி <


