News January 1, 2026

நெல்லை: ரூ.37,815 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி! APPLY

image

நெல்லை மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் நெல்லை சுற்றுவட்டாரத்தில் உள்ள வங்கி கிளைகளில் பணியமர்த்தப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க..

Similar News

News January 1, 2026

நெல்லையில் இனி 1000 பேருக்கு IT வேலை

image

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT

News January 1, 2026

நெல்லை: ஜன.4 முதல் வீடு தேடி வரும்

image

தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் மாதம்தோறும் 65 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பிடங்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு ஜனவரி மாதத்தில் வருகிற 4, 5 ஆம் தேதிகளில் ரேஷன் பொருட்களை வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட பயனாளிகள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News January 1, 2026

நெல்லையில் மரண தண்டனை விதிப்பு

image

கடந்த 2025ம் ஆண்டில் நெல்லை மாவட்டத்தில் 27 கொலை வழக்குகளில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், 98 பேருக்கு ஆயுள் தண்டனையும் வாங்கித் தரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுபோன்ற அதிக வழக்குகள் தண்டனை பெற்றுத் தருவது இதுவே முதல் முறையாகும் என மாவட்ட காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 கொலை முயற்சி வழக்கில் 21 பேருக்கு தண்டனை, ஒரு கூட்டுக் கொள்ளை வழக்கில் 2 கொள்ளை வழக்கில் தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது.

error: Content is protected !!