News April 7, 2025

நெல்லை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (INSURANCE) பிஸ்னஸ் டெவலப்மென்ட் பணிக்கு காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடும் நண்பர்கள், உறவினர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

Similar News

News April 10, 2025

நெல்லை: ம.சு பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதிலிருந்து தற்போது கல்லூரியில் வேலை செய்யும் வரை தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை வேதியியல் துறை பேராசிரியர் கொடுப்பதாக தற்காலிக பேராசிரியர் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்திற்கும் உயர்கல்வி துறைக்கும் மனு அனுப்பியுள்ளார். இந்த குற்றச்சாட்டு குறித்து பல்கலைக்கழகம் விசாரிக்க தமிழக உயர் கல்வி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

News April 10, 2025

12ஆம் தேதி ரேஷன் அட்டை குறைதீர்க்கும் முகாம்

image

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் நேற்று (ஏப்ரல் 9) விடுத்துள்ள செய்தி குறிப்பு: வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் நடைபெற உள்ளன. புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மனு அளித்து பலனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.

News April 10, 2025

அறிவியல் மையத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

image

பள்ளி மாணவ- மாணவிகள் கோடைக்கால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் கோடைக்கால அறிவியல் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. வரும் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை மின்னணுவியல் என்ற பிரிவு 8-9மாணவ மாணவிகளுக்ககவும். STEM Activity என்ற பிரிவில் 5-8 மாணவ- மாணவிகளுக்கும் நெல்லை அறிவியல் மையத்தில் நடக்கிறது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!