News August 30, 2025

நெல்லை: ரூ.1.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

image

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ரூ.27,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று செப். 2 முதல் அக்.1க்குள் விண்ணப்பிக்கவும். SHARE

Similar News

News August 30, 2025

பல்கலை வகுப்புகள் செப்.1 முதல் துவக்கம்; துணை வேந்தர் தகவல்

image

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மாணவர்கள் மோதல் விவகாரத்தால் நேற்று முதல் பல்கலைக்கழகத்திற்கு கால வரையற்ற விடுமுறை வகுப்புகள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் செப்.1ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பல்கலைக்கழகம் வழக்கமாக செயல்படும் என துணைவேந்தர் சந்திரசேகர் இன்று அறிவித்துள்ளார்.

News August 30, 2025

மாவட்ட சுகாதார அலுவலர் பொறுப்பேற்பு

image

திருநெல்வேலி மாவட்ட சுகாதார அலுவலராக டாக்டர் கீதாராணி பணி செய்து வந்த நிலையில் அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த இடத்திற்கு பொறுப்பு சுகாதார அலுவலராக முருகன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதிய சுகாதார அலுவலராக விஜயசங்கர் என்பவர் நியமிக்கப்பட்டார்.அவர் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட சுகாதார அலுவலருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

News August 30, 2025

திருநெல்வேலி: உங்கள் பகுதி காவல் நிலையத்தின் எண்கள்

image

நெல்லை மாவட்ட காவல்துறை குற்றங்களை கட்டுபடுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த <>லிங்கில் <<>>நெல்லை மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களின் எண்களும் இடம்பெற்றுள்ளது. தேவைப்படும் சமயத்தில் நீங்கள் உங்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களுக்கு இதன் மூலம் அழைக்கலாம். இதனை மற்ற பகுதியிலுள்ள உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஷேர் செய்து உதவுங்கள்.

error: Content is protected !!