News March 19, 2024
நெல்லை: ராமர் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளல்

பாளை ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று (மார்ச் 18) 3ஆம் திருநாள் விழாவை முன்னிட்டு இரவு ஸ்ரீராமர் அலங்காரத்துடன் அனுமன் வாகனத்தில் ராஜகோபால சுவாமி பெருமாள் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
Similar News
News August 14, 2025
நெல்லையில் அரசு வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட வருவாய்த்துறையில் 37 (Village Assistant) கிராம உதவியாளர் பதவிக்கான 37 காலியிடங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணபிக்க கடைசி நாள் 16-08-2025. 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களுக்கு ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். *நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
News August 14, 2025
தொடர் விடுமுறை எதிரொலி; ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் நாளை முதல் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை இருப்பதால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். எனவே தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. சென்னை டூ நெல்லைக்கும் நெல்லை டூ சென்னைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லைக்கு வழக்கமாக அதிகபட்சம் ரூ.1500 டிக்கெட் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது ரூ.3000 வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
News August 14, 2025
நெல்லை: உங்க சொத்து விபரம் இனி உங்க PHONE-ல!

நெல்லை மக்களே, உங்க சொத்து யார் பேர்ல இருக்கு, அடமானத்தில் உள்ளதா, கோர்ட் உத்தரவில் உள்ளதான்னு CHECK பண்ண நீங்க பத்திரப்பதிவு அலுவலகம் (அ) கம்யூட்டர் செண்டர்க்கு அழைய தேவையிலை. இனி உங்க PHONE-ல பார்க்கலாம்… இங்கு <