News August 20, 2025

நெல்லை: ரயில் சேவையில் மாற்றம்!

image

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 6வது நடைமேடை அமைக்கும் பணிக்காக நெல்லை – திருச்செந்தூர் நாளை காலை 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில்(56729) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை – நெல்லை காலை 10.05 மணிக்கு புறப்படும் ரயில் சேரன்மகாதேவி, நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுபோல மேலும் சில ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News January 28, 2026

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜன. 28 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News January 28, 2026

நெல்லை புத்தகத் திருவிழா: கலெக்டர் ஆலோசனை

image

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் பொருநை புத்தகத்தில் உள்ள பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா விரைவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் இன்று ஜனவரி 28 மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News January 28, 2026

நெல்லை: ரூ.1000 வரலையா? இங்க COMPLAINT பண்ணுங்க!..

image

நெல்லை மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. 30 நாளில் தீர்வு கிடைக்கும். SHARE பண்ணுங்க..!

error: Content is protected !!