News May 21, 2024

நெல்லை: ரயில் அடிபட்டு முதியவர் பலி

image

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் பேட்டை எம்ஜிஆர் நகர் ஜெகஜீவன் தெருவில் வசித்துவரும் தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். சரிவர காது கேட்காத சண்முகம் நேற்று (மே 20) மாலை பஜாருக்கு செல்வதற்காக ரயில்வே தண்டவளத்தை கடந்தபோது, செங்கோட்டையிலிருந்து தாம்பரத்திற்குச் சென்றுகொண்டிருந்த அதிவேக ரயில் அவர் மீது மோதியதில் அவர் பலியானார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

மாவட்ட அணைகளின் நீர்வரத்து மற்றும் விவரங்கள்

image

திருநெல்வேலி மாவட்டம் சுற்றியுள்ள பகுதிகளிலே அணைகளின் நீர்மட்ட விபரங்கள் பாபநாசம் அணை 143/64.84%mm, மணிமுத்தாறு அணை 118/66.54%mm, செயலாளார் அணை156/52.39%mm, வடக்குப்பச்சார அணை 49.30/4.64%mm, நம்பியார் அணை22.96/21.21%mm, கொடுமுடியாறு அணை 52.50/79.96%mm, மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மூன்று அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

News November 11, 2025

நெல்லை: கம்மி விலையில் சொந்த வீடு – APPLY!

image

நெல்லை மக்களே, TNHB திட்டம் மூலம் மக்களுக்கு மானிய விலையில் சொந்த வீடு வாங்கும் கனவை அரசு நிறைவேற்றி வருகிறது. உங்க மாவட்டத்திலே சொந்த வீடு வேணுமா? 21 வயது நிரம்பி, எந்த சொத்தும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். சம்பளம்: 25,000 – 70,000 வரை பெறுபவர்கள் இங்கு <>க்ளிக் <<>>செய்து பெயர், மொபைல் எண், சான்றிதழ்கள், ஆண்டு வருமானம் பதிவு செய்து விண்ணப்பியுங்க.. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..

News November 11, 2025

நெல்லை: கொடுமுடியாறு அணையில் நீர் திறப்பு

image

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கபட்டது. 52.50 அடி உயரமுள்ள இந்த அணையின் நீர்மட்டம், கடந்த மாதம் பெய்த மழையால் 50 அடி தாண்டியது. தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 49 அடியாக உள்ளதால் நாங்குநேரி ராதாபுரம் வட்டங்களில் உள்ள விவசாயிகள் கோரிக்கை ஏற்று, அணையை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதால் பேரவை தலைவர் அப்பாவு தண்ணீரை திறந்து வைத்தார்.

error: Content is protected !!