News September 24, 2025
நெல்லை ரயில்வே கேட் இன்று மூடல்

திருநெல்வேலி வாஞ்சி மணியாச்சி இடையே உள்ள ரயில்வே வழி தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கங்கைகொண்டான் அருகே புளியம்பட்டி ரயில்வே கேட் இன்று செப்டம்பர் 24 பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்பட்டிருக்கும். எனவே இந்த பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் செல்ல ரயில்வே அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தகவலை தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
Similar News
News September 24, 2025
நெல்லை: தெரு நாய் பிரச்சனை – மேயர் முக்கிய தகவல்

திருநெல்வேலி மாநகரில் தெருநாய்கள் பிரச்சனையை கட்டுப்படுத்த தனியார் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. நாய்களை பிடித்து அறுவை சிகிச்சைக்கு பின் அதே இடத்தில் விடும் பணியும் நடக்கிறது. தெரு நாய்கள் மற்றும் வெறிநாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தீவிரபடுத்தப்படும் என்றார்.
News September 24, 2025
நெல்லை: நெட்டீசன்களுக்கு எஸ்பி எச்சரிக்கை

நெல்லை எஸ்பி சிலம்பரசன் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
நெல்லை: டிஜிட்டல் ஆதார் APPLY பண்ணுங்க..!!

நெல்லை மக்களே ஆதார் கார்டு உங்க போன்ல இல்லையா? இதனால இன்னும் முக்கியமான இடங்களில் ஆதாரை கைல கொண்டு போறீங்களா?? உங்க whatsappல ஆதார் பதிவிறக்கம் செய்ய எளிய வழி. DIGI LOCKERன் 9013151515 இந்த எண்ணை உங்க போன்ல சேமித்து HIன்னு குறுஞ்செய்தி அனுப்புங்க. அதில் டிஜிட்டல் ஆதார் -ஐ தேர்ந்தெடுத்து உங்க ஆதார் எண் பதிவு செய்தால் உங்க வாட்ஸ் ஆப்க்கே வந்துடும்.இந்த தகவலை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..