News December 18, 2025

நெல்லை ரயிலில் 18 கிலோ கஞ்சா

image

சென்னை எக்மோரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை ரயில்வே இருப்பு பாதை, பாதுகாப்பு படையினர் இணைந்து நேற்று சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் 3வட மாநில வாலிபர்களிடம் 18 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். 10 நாட்களில் 55 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

Similar News

News December 22, 2025

நெல்லை: இருவருக்கு அரிவாள் வெட்டு., ஒருவர் கைது!

image

தச்சநல்லூர் அருகே கரையிருப்பு பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் மூக்கன்(52) என்பவர் தங்க கணபதியை(48) அரிவாளால் வெட்டினார். இதை அறிந்த தங்க கணபதியின் சகோதரர் முத்துக்குமரன்(46), மூக்கனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினார். காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில் தப்பியோடிய முத்துக்குமரனை போலீஸார் கைது செய்தனர்.

News December 22, 2025

நெல்லை: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

நெல்லை மக்களே; தமிழக அரசால் இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.

News December 22, 2025

நெல்லை: மாடு மோதிய விபத்தில் உயிரிழப்பு

image

வி கே புரம் அருகே உள்ள அய்யனார் குளத்தைச் சேர்ந்தவர் சேவியர் (38). ஆட்டோ ஓட்டுனரான இவர் கடந்த 17ஆம் தேதி அம்பலமானபுரம் சாலையில் பைக்கில் சென்ற போது மாடு மோதியதில் படுகாயம் அடைந்தார். அவர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிழந்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!