News August 6, 2025
நெல்லை: மேயர் தலைமையில் குறைத்தீர் முகாம்

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனு பெற்றார். மாநகரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் மனுக்களை அளித்தனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மேயர் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் துணை மேயர் கே ஆர் ராஜி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 6, 2025
நெல்லை: யோகா இயற்கை மருத்துவ படிப்பிற்கு அழைப்பு

நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, 2025-26 கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) மருத்துவ பட்டப்படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் இணையவழியில் பெறப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் தொகுப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். *ஷேர்*
News August 6, 2025
கவின் கொலை: ஷியாம் கிருஷ்ணசாமி மீது அவதூறு வழக்கு

நெல்லை கே.டி.சி. நகரில் கடந்த மாதம் ஐ.டி. ஊழியர் கவின் கொலை தொடர்பாக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், குறிப்பிட்ட சமுதாயத்தை அவதூறாகப் பேசி இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் மீது நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
News August 6, 2025
BREAKING:நெல்லையில் அடுத்த கொலை

நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகே சங்கநேரியில் இரு சக்கர வாகனத்தில் நண்பருடன் சென்ற பிரபுதாஸ் (27), என்ற பட்டியலின வாலிபர் மர்ம நபர்களால் கழுத்து அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நண்பர் காயமடைந்தார். இந்த பயங்கர சம்பவம் குறித்து ராதாபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.