News November 18, 2024
நெல்லை மேட்டுப்பாளையம் வாராந்திர ரயில் சேவை நீட்டிப்பு
நெல்லை மேட்டுப்பாளையம் இடையே ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி – அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி – தென்காசி, சங்கரன்கோவில், மதுரை பழனி , வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் இந்த வாராந்திர இரயில் சேவை பிப்ரவரி 03/2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பயணிகள் கோரிக்கை ஏற்று நீட்டிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 19, 2024
திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் ரயில் பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு
திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில் (வ.எண்.06030) வரும் பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என நேற்று மாலை (நவ.18) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில், விருதுநகர், மதுரை வழியாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
News November 19, 2024
சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு
நெல்லையில் வரும் 20ஆம் தேதி சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை தலைமையில் இந்த ஆய்வு கூட்டம் நடக்கிறது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர். பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர் என இவ்வாறு கலெக்டர் கார்த்திகேயன் நேற்று (நவ 18) தெரிவித்தார்.
News November 19, 2024
நெல்லை மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்
#இன்று(நவ.,19) காலை 10:30 மணிக்கு மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. #10 மணிக்கு வண்ணார்பேட்டை செல்ல பாண்டியன் மேம்பாலம் அருகே விஸ்வகர்மா சமுதாயத்திற்கு 5 சதவீத உள் ஒதுக்கீடு கோரி விஷ்வ ஜனசக்தி தொழிற்சங்க பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.