News March 24, 2024

நெல்லை: முருங்கைகாய் விலை கடும் சரிவு

image

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முருங்கைகாய் விலை உச்சம் பெற்றது. ஒரு கிலோ 400 ரூபாய் வரை உயர்ந்தது. இந்த மாத தொடக்கத்திலிருந்து இதன் விலை சரிய தொடங்கியது. வேகமாக சரிந்து வந்த முருங்கைகாய் விலை இன்று (மார்ச் 24) ஒரு கிலோ 25 ரூபாய்க்கு பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. 

Similar News

News August 13, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஆக.12] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் சரவணன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

News August 12, 2025

இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்.12) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News August 12, 2025

குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி

image

நெல்லை மாவட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நாளை 13ம் தேதி ஆரம்பமாகிறது. ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய் என்பது குழந்தைகளுக்கு கை கால் மற்றும் மூளை செயலிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்படும். மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 593 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது என கலெக்டர் சுகுமார் தெரிவித்தார்.

error: Content is protected !!