News April 24, 2025

நெல்லை- மும்பை கோடை ரயிலுக்கு முன்பதிவு தொடக்கம்

image

கோடை விடுமுறையை முன்னிட்டு நெல்லை வழியாக கன்னியாகுமரி – மும்பை இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் மே.8 முதல் ஜூன்.26 வரை வியாழக்கிழமை தோறும் பகல் 1:30 மணிக்கு குமரியில் புறப்படும். மறு மார்க்கத்தில்  புதன்கிழமை தோறும் மே.7 முதல் ஜூன்.25 வரை மும்பையில் இருந்து புறப்படும். இந்த ரயிலுக்கு முன்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Similar News

News May 7, 2025

பாவங்கள் நீங்க வேண்டுமா பாபநாசத்திற்கு வாருங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ஸ்தலத்தில் அடியார்கள் வந்து தீர்த்த நீராடி பாபநாசரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். எனவே இத்தலம் பாபநாசம் என்றானது. இத்தலத்தில் அகஸ்தியருக்கு ஈசன் திருக்கல்யாண கோலம் காட்டியதால் இத்தலத்தை கல்யாணபுரி என்றும் அழைப்பர். இக்கோவிலில் வரும் நான்காம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2025

நெல்லை – செங்கோட்டை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

image

நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் தரையில் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு ரயிலில் மட்டும் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டது. அதிகாலை மற்றும் மாலை நேர ரயில்களில் முக்கியத்துவம் கருதி, அடுத்த 10 நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளதாக ராபர்ட் ப்ரூஸ் எம்பி தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் 23 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியர்கள் 23 பேர் பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தரவிட்டு உள்ளார். அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய வட்டாட்சியர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!