News December 5, 2025

நெல்லை முக்கிய ரயில் சேவை நீட்டிப்பு

image

நெல்லையில் இருந்து டிசம்பா் 7ம் தேதி முதல் ஜனவரி 25-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும். நெல்லை – மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும். மறுமாா்க்கமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து டிசம்பா் 8ம் தேதி முதல் ஜனவரி 26ம் தேதி வரை இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு ஒரு நாள் காலை 7:45க்கு நெல்லை வரும்.

Similar News

News December 5, 2025

நெல்லை: 10th தகுதி., மத்திய அரசில் 25487 காலியிடங்கள்! APPLY

image

நெல்லை மக்களே, மத்திய அரசின் 25487 Constable (GD) பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிரம்பிய 10வது தேர்ச்சி பெற்றவர்கள் டிச 31க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் நியமனம் செய்யப்படுவர். மத்திய அரசின் வேலை வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 5, 2025

நெல்லை ரயிலில் 15 கிலோ கஞ்சா

image

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் நேற்று இரவு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு கேட்பாரற்றிருந்த 3 பைகளை கைப்பற்றினர். அதில் 15 கிலோ எடை உள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை கொண்டு வந்தவர் யார்? எங்கே கொண்டு செல்லப்பட்டது என விசாரணை.

News December 5, 2025

நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 5) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!