News August 6, 2025

நெல்லை மீன் பிடிக்க சென்றவர் தவறி விழுந்து உயிரிழப்பு

image

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில், இந்திரா காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சந்தன குமார், மீன் பிடிக்க சென்றபோது ஊரா குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 7, 2025

நெல்லையில் இன்று கைத்தறி தின கண்காட்சி

image

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் விடுத்துள்ள அறிக்கை: பதினோராவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 7ம் தேதி சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது. நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட உள்ளது. நெசவாளர் கூட்டுறவு சங்க கைத்தறி ஜவுளிகள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்படுவதால் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

நாரணம்மாள்புரம் பகுதியில் குவாரிக்கு தடையில்லா சான்று

image

தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், திருநெல்வேலியைச் சேர்ந்த முகமது சலீம் பாதுஷாவுக்கு நாரணம்மாள்புரம் பகுதியில் ஸ்டோன் மற்றும் கிராவல் குவாரி நடத்துவதற்கு சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://parivesh.nic.in இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ஆணையம் தெரிவித்துள்ளது.

News August 6, 2025

சுர்ஜித், எஸ்ஐ சரவணனை காவலில் விசாரிக்க சிபிசிஐடி மனு

image

நெல்லையில் கவின் ஆணவப் படுகொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணனை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் உலகராணி ஆகியோர் நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் அமர்வு தீண்டாமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (06.08.2025) மனு தாக்கல் செய்தனர்.

error: Content is protected !!