News September 10, 2025
நெல்லை: மின்சாரம் தொடர்பான புகாரா?

நெல்லையில் சமீபத்தில் ஒருவருக்கு ரூ.1 கோடியே 60 இலட்சம் மின் கட்டணமாக வந்தது. விசாரணையில் அது பிழை என கண்டறியப்பட்டது. ஆகவே மின்சாரம் சம்பந்தமாக அனைத்து சேவைகளுக்கும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் செயலி (TNPDCL APP) பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி மின் தடை நீக்கும் மையம் தொலைபேசி எண்கள் 9445859032, 9445859033, 9445859034 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். *ஷேர் பண்ணுங்க
Similar News
News September 10, 2025
நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

இன்று காலை 10 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
பாளையங்கோட்டை என் ஜி ஒ ஏ காலனி பகுதியில் 2 இடங்களில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா காலை 10:30 மணிக்கு அப்துல் கப் எம்எல்ஏ தலைமையில் நடக்கிறது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு வாராந்திர குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
News September 10, 2025
நெல்லை: அரசு பள்ளி முன் பெற்றோர்கள் போராட்டம்

மருதகுளம் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு மாணவனுக்கு மட்டும் டிசி வழங்கினார். இதனால் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவனை மீண்டும் சேர்க்க மறுத்ததால், தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு தர்ணா நடத்தினர். மூன்றடைப்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
News September 10, 2025
அபிஷேக பட்டி அருகே நாய் கடித்து மான் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம், கங்கைகொண்டான் மான் பூங்கா சரணாலயத்தில் இருந்து வெளியேறும் மான்கள் மானூர், அபிஷேகப்பட்டி, மாறாந்தை பகுதிகளில் நடமாடுகின்றன. இந்நிலையில் கல்லத்திகுளம் கிராமத்தின் மேல் புறமுள்ள குன்றில் நேற்று தண்ணீர் அருந்த வந்த புள்ளிமான் ஒன்றை நாய்கள் கடித்தன. இதில் மான் சம்பவ இடத்திலேயே இறந்தது. வனத்துறையினர் மான் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.