News January 22, 2026
நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

ஜனவரி மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 28, 2026
நெல்லை: ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News January 28, 2026
நெல்லை மாணவி தங்கம்ப்பதக்கம் வென்று அசத்தல்

கூடன்குளத்தை சார்ந்த வீராங்கனை பார்கவி மாநிலங்களுக்கு இடையே நடைபெற்ற பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி தேசிய அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ஏற்கனவே மாணவி மாவட்ட மற்றும் மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் தமிழக அணிக்காக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். நெல்லைக்கு பெருமை சேர்த்த மாணவியை நீங்களும் வாழ்த்தலாமே…
News January 28, 2026
நெல்லை: வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க


