News March 21, 2024

நெல்லை மாவட்ட செயலாளர் அழைப்பு

image

நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் நாளை மறுநாள் (மார்ச் 23) காலை 10 மணியளவில் வண்ணார்பேட்டை தனியார் ஹோட்டலில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் பங்கேற்க நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நேற்று (மார்ச் 20) வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News January 20, 2026

ஊர்க்காவல் படையினர் மூலம் புதிய திட்டம் தொடக்கம்

image

நெல்லை மாவட்டத்தின் முக்கியமான நகரங்களில் போக்குவரத்தை சீர் செய்யும் வகையில், ஊர்க்காவல் படையினரை அந்த பணிகளில் முழுமையாக ஈடுபடுத்தும் திட்டம் திருநெல்வேலி மாவட்டத்தில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது. நாங்குநேரி, ராதாபுரம், வள்ளியூர், சேரன்மகாதேவி, அம்பை, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது முதல் முறையாக முழுமையாக இந்த பணிகளில் ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

News January 20, 2026

நெல்லை: ரூ.20 செலுத்தினால் ரூ.2 லட்சம் காப்பீடு!

image

நெல்லை மக்களே.., உங்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி சுரக்‌ஷா பீம யோஜனா’ திட்டம் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். இதற்கு யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே<> கிளிக்<<>> செய்து பதிவிறக்கம் செய்யுங்கள். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, வங்கி மேலாளரிடம் கொடுத்தால் போதும். உடனே அனைவருக்கும் SHARE!

News January 20, 2026

நெல்லை: பள்ளி வளாகத்தில் நடந்த திருட்டு

image

திசையன்விளை அருகே சுவிசேஷபுரத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் கணேசன்(41), திசையன்விளை அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாளராக பணியாற்றுகிறார். பள்ளி வளாகத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு திரும்பி வந்தபோது, வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!