News December 13, 2024
நெல்லை மாவட்ட அணைகளின் நிலவரம்

நெல்லையில் விடிய விடிய மழை பெய்யும் நிலையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 76.500 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 97.34 அடியாகவும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 87.28 அடியாகவும் உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 6656 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. பாபநாசம் மணிக்கு 6427 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
Similar News
News March 9, 2026
நெல்லையில் பொது ஏலம் அறிவிப்பு

நெல்லை மாவட்ட காவல் தொலைதொடர்பு பிரிவில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட உள்ள பொருட்களை மார்ச்.12 அன்று பொது ஏலம் விடப்பட உள்ளது. இதில் 32 Heavy Duty Batteries மற்றும் 533 இதர பொருட்களுக்கு பொது ஏலம் நடத்தப்படுகிறது. விருப்பமுள்ளோர் மாசு கட்டுபாட்டு வாரியத்தில் உரிமம் பெற்ற சான்றிதழ்களுடன் ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு எஸ்பி பிரசன்னகுமார் அறிவித்துள்ளார்.
News March 9, 2026
BREAKING மீண்டும் அரங்கேறிய நாங்குநேரி சம்பவம்

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே போதை ஆசாமிகள் இரண்டு பேரை படுகொலை செய்த நிலையில் நேற்று வீரவநல்லூர் அருகே போதை ஆசாமிகள் விவசாயி ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். வீரவநல்லூர் அருகே சக்தி குளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர் நேற்று தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது அந்த இடத்திற்கு வந்த போதைஆசாமிகள் அவரை வெட்டியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது
News March 9, 2026
நெல்லை மாவட்ட காவல்துறையினரின் விளக்கம்

நாங்குநேரி பெரும்பத்து கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தில் நெல்சன் என்பவர் காயம் அடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியில் அவருடைய தாயார் இறந்ததாக சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல் செய்தி பரவி வருகிறது. இது குறித்து காவல்துறை அளித்த விளக்கத்தில் வயது முதிர்வு காரணமாக நெல்சன் என்பவரின் தாயார் காலமானார் என்றும் எனவே வதந்தியை பரப்ப வேண்டாம் .


