News October 23, 2024
நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன 800 குளங்கள்

நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (அக்.22) லேசான சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள 1200 குளங்களில் சுமார் 800 குளங்கள் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது. மீதமுள்ள குளங்களில் பெயரளவுக்கு தண்ணீர் இருக்கிறது. களக்காடு வட்டம் அதன் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டு காணப்படுகிறது.
Similar News
News January 26, 2026
நெல்லை: கிணற்றில் மிதந்த இளம்பெண் சடலம்

மானூர் குப்பனாபுரத்தை சேர்ந்த அந்தோணி என்பவருடைய மனைவி பக்கியத்தாய் (23). இவர் அப்பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. மதியம் 3 மணியளவில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பத்தாக தெரிய வந்தது. தகவல் அறிந்து வந்த மானூர் போலீசார் உடலை கைப்பற்றி பாளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 26, 2026
நெல்லை: 10th போதும்., ரிசர்வ் வங்கியில் ரூ.46,029 சம்பளம்

நெல்லை மக்களே, இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 572 Office Attendant பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 25 வயதுகுட்பட்ட 10ம் வகுப்பு படித்தவர்கள் பிப். 4க்குள் இங்கு <
News January 26, 2026
நெல்லையில் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று இரவு தொடங்கி நாளை காலை 6 மணி வரை இரவு நேர காவல் பணியில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விபரம் அவரது கைபேசி எண்களுடன் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர காவல் சேவை தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட உட்கோட்டை காவல் ஆய்வாளர்களை அவர்களது கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவையை பெறலாம்.


