News June 9, 2024

நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி

image

நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், நெல்லை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும், 12ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஜமா பந்தி நடைபெற உள்ளது, ஜமாபந்தியின் போது மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தங்களது கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நாளில் வருவாய் தீர்வாய அலுவலரிடம் அளித்து பயனடையலாம் எனக் கூறியுள்ளார்.

Similar News

News November 12, 2025

நெல்லை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

image

நெல்லை மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதில வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <>கிளிக்<<>> செய்து Fill Enumeration Form -ஐ தேர்ந்தெடுத்து மொபைல் எண் (அ) வாக்காளர் எண் மூலம் நுழைந்து SIR படிவத்தை பூர்த்தி செய்து உங்க பெயரை வாக்காளர் பட்டியலில் சேருங்க. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 12, 2025

நெல்லை: மாடியில் இருந்து விழுந்து வாலிபர் பலி

image

முக்கூடல் காந்தி தெருவை சேர்ந்த நிராஜ் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டு மாடியில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். இந்நிலையில் அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயத்துடன் கிடந்துள்ளார். பாப்பாக்குடி போலீசார் நிராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

News November 12, 2025

நெல்லை ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து

image

நெல்லை ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கும் பணிக்காக திருச்செந்தூரில் இருந்து காலை 10.10 மணிக்கு நெல்லைக்கு புறப்படும் பயணிகள் ரயிலானது வரும் 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு இரயில்வே அறிவத்துள்ளது. மேலும், செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை வரும் ரயில் சேரன்மகாதேவி வரை மட்டுமே மேற்கண்ட 3 நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!