News October 24, 2024
நெல்லை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் ரத்து

தமிழக முழுவதும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தப்பட இருந்தது. அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி என்பதால் மறுநாள் நவம்பர் ஒன்றாம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று (அக்.24) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 12, 2025
தாடி வளர்க்க அனுமதி கோரிய கைதியால் பரபரப்பு

பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தான் தாடி வளர்க்க அனுமதிக்க வேண்டுமென சிறைக் கண்காணிப்பாளருக்கு கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. முக்கிய காரணங்களுக்காக நீதிமன்றத்தின் முறையான அனுமதி பெற்று சமர்ப்பித்தால் உரிய முறையில் பரிசளிக்கப்படும் என சிலை வட்டாரம் சார்பில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
News November 12, 2025
நாங்குநேரி அருகே வேன் கவிழ்ந்து விபத்து; 5 பேர் காயம்

நாங்குநேரி அருகே உள்ள பகுதியில் இன்று மதியம் 2 மணி அளவில் வேன் நான்கு வழி சாலை அருகே உள்ள இணைப்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்று கொண்டிருந்த வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 12, 2025
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கால அட்டவணை வெளியீடு

தலைமை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படியும் உத்தரவு படியும் திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற ஒன்று ஒன்று 2026ம் ஆண்டு தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகளுக்கான கால அட்டவணைகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார். அதன்படி வருகின்ற கணக்கெடுப்பிற்கான காலம் வாக்குச்சாவடி மறு வரையறை வாக்காளர் பட்டியல் என கால நிர்ணயம்.


