News December 15, 2024
நெல்லை மாவட்டத்தின் இன்றைய நிகழ்வுகள்

காலை 8.30 மணிக்கு காரியாண்டியில் வெள்ளநீர் கால்வாய் கருமேனியாற்றில் அமைந்துள்ள திருப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார். காலை 9:00 மணி முதல் வடக்கு சங்கன் திருடு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. நொச்சிகுளத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு இலவச நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. நெல்லை இஸ்கான் கோயிலில் மாலை ஐந்து முப்பது மணிக்கு பகவத் கீதை வைபவம் நடக்கிறது.
Similar News
News November 18, 2025
மீனவ சமுதாய இளைஞர்களுக்கான போட்டி தேர்வு ஆயத்த பயிற்சி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க மற்றும் மீனவர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள மீனவர்களின் வாரிசுதாரர்கள் குடிமைப் பணிகளில் சேர்வதற்கு ஆயத்த பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நவ.25 க்குள் வழங்க வேண்டும்.

News November 17, 2025
நெல்லை: ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தந்தை, மகன்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற்ற தகுதித் தேர்வு (டெட்) 33 மையங்களில் தேர்வு எழுத 157 மாற்றுத் திறனாளிகள் உள்பட 11,640 பேருக்கு தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. அவர்களில், 10,565 பேர் தேர்வை எழுதினர். பாளை தனியார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையங்களில் தந்தையும் மகனும் தேர்வு எழுதினர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் ஆய்வு செய்தார்.