News January 10, 2026

நெல்லை: மாணவி கழுத்தை நெரித்து கொலை

image

நெல்லை வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன் (52). இவரது மகள் வர்ஷினி (22) சேலம் தனியார் சித்த மருத்துவ கல்லூரியில் பயின்று வந்தார். இவர் கடந்த ஜன.7ம் தேதி தான், தங்கியிருந்த வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்ப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொள்கையில் வர்ஷினியின் தந்தை தலைமறைவானது தெரிந்தது. இதனால், அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News February 2, 2026

நெல்லை : பெண்களுக்கு ரூ.3 லட்சம்… APPLY NOW!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <>கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இதனை ஷேர் பண்ணுங்க!

News February 2, 2026

தங்கப்பதக்கம் வென்ற கூடங்குளம் மாணவன்

image

கூடன்குளம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணி – திருமணி செல்வி தம்பதியினரின் மகன் சித்திரை சதீஷ் என்பவர் நேற்று (பிப் 1) நடைபெற்ற 7th ஜூனியர் பால் பேட்மிட்டன் போட்டியில் தமிழ்நாடு அணிக்காக சிறப்பாக விளையாடி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே மாவட்ட அளவிலும் பல்வேறு போட்டிகளில் பதக்கம் பெற்றுள்ளார். எனவே மாணவரின் சாதனையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

News February 2, 2026

நெல்லை: 10th முடித்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி! NO EXAM

image

நெல்லை மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10வது முடித்தவர்கள் பிப் 16க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

error: Content is protected !!