News September 19, 2025

நெல்லை மாணவர்கள் சாதனை!

image

நெல்லை என்.சி.சி மாணவர்கள் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று சாதனை; 50வது தமிழக துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். நெல்லை 5 தமிழக பட்டாலியன் என்.சி.சி., மாணவர்கள் 3 பேர் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றனர். பாளை., தனியார் கல்லூரி மாணவி பிரியங்கா 3பி ஓபன் சைட் ஜூனியர் பிரிவில் தங்கபதக்கம், புரோன் ஓபன் சைட்டில் வெண்க லபதக்கம் வென்றார்.

Similar News

News September 19, 2025

நெல்லை: வீடுகளில் தொடர் கொள்ளை – மக்களே உஷார்

image

நெல்லை மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின் பேரில் இரவு நேர கண்காணிப்பை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த ஒரு மாதத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை, கொள்ளை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 கிராம் தங்க நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆணையாளர் தெரிவித்தார்.

News September 19, 2025

நெல்லை: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை. எல்லோருக்கும் SHARE பண்ணு

News September 19, 2025

கவின் கொலை வழக்கு: போலி பதிவெண் பயன்படுத்திய சுர்ஜித்!

image

நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கவின் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் ஆக. 18 முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை SI சரவணனிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலை செய்த சுர்ஜித் பயன்படுத்திய டூவீலர் பதிவெண் போலி என தெரிய வந்துள்ளது. மேலும் கொலைக்காக ஜெயபால் என்பவர் இடத்தையும் சுர்ஜித் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

error: Content is protected !!