News November 20, 2025
நெல்லை: மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே பசுக்கிடை விளை காமராஜர் மேற்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் செஞ்சி லெட்சுமி (57). இவருக்கு நீரழிவு நோய் அதிகமாக அளவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று வீட்டை விட்டு வெளியே வரும்போது தலைசுற்றி மாடியில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
நெல்லை: விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு

விகேபுரம் அருகே காக்காநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமாருக்கும் அங்குள்ள யூனியன் கவுன்சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் முத்துக்குமார் கடந்த 19ம் தேதி விஷம் குடித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை முத்துக்குமார் உயிரிழந்தார். இது குறித்து விகே புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 22, 2025
நெல்லை: ரேஷன் கடை பிரச்சனைக்கு இதோ தீர்வு!

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News November 22, 2025
நெல்லை: 2002ம் SIR-ஐ தெரிந்துகொள்ள QR கோர்டு சேவை

நெல்லை மாவட்டத்தில் தீவிரமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நடைபெற்று வரும் இந்த பணிகளில் முந்தைய சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ள விபரங்கள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள பல்வேறு இணைய சேவைகள் வழங்கப்பட்டாலும் திருநெல்வேலி மாவட்டம் நிர்வாகம் புதிய QR கோர்டு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் பயன் பெறலாம்.


