News October 24, 2025
நெல்லை: மழைக்கால அவசர உதவி மைய எண்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மழைக்காலத்தில் மக்களுக்கு அவசர உதவிக்கான தொடர்பு எண்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மைய எண் 1077 மற்றும் 0462501070 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் காவல்துறை, தீயணைப்பு துறை மருத்துவம் போன்ற பிற சேவைக்கான எண்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Similar News
News October 25, 2025
நெல்லை: தந்தைக்கு கத்திக்குத்து – மகன் வெறிச்செயல்

நெல்லை, மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவர் நேற்று முன்தினம் திடீரென தனது தந்தை முருகனை கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 25, 2025
நெல்லை: விவசாயிகளுக்கு கலெக்டர் குட் நியூஸ்

கலெக்டர் சுகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்தாண்டு தற்போது வரை 21,177.92 மெ.டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மழையால் அம்பை பாளை மானூர் பகுதியில் நெல் பயிர் சேதமடைந்துள்ளதால் 80-க்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். சேத விபர அறிக்கை விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என கூறியுள்ளார்.
News October 25, 2025
நெல்லை: மழைக்கால அவசர எண்கள் அறிவிப்பு!