News June 25, 2024
நெல்லை மருத்துவமனைக்கு 10 டயாலிசிஸ் கருவிகள்

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.1 கோடி மதிப்பில் புதிதாக 10 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரோடு சங்க உதவியுடன் வழங்கப்பட்டுள்ள இந்த டயாலிசிஸ் கருவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜூன் 25) கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News September 14, 2025
நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு

மைசூர் – நெல்லை சிறப்பு ரயில் (06239) வருகிற 15 ஆம் தேதி முதல் நவம்பர் 24 வரை திங்கட்கிழமை தோறும் மைசூரில் இருந்து இரவு 8.15 க்கு புறப்படும். மறு மார்க்கத்தில் நெல்லை மைசூர் சிறப்பு ரயில் (06240) செவ்வாய் கிழமை மாலை 3. 40 மணிக்கு புறப்படும். தசரா தீபாவளியை முன்னிட்டு இயக்கப்படும் எந்த ரயிலுக்கு முன்பதிவு நடக்கிறது.
News September 13, 2025
நெல்லை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (செப்.13) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News September 13, 2025
நெல்லை மக்களே அனைத்து வரிகளும் இனி ஒரே இடத்தில்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை <