News December 19, 2024
நெல்லை மருத்துவக் கழிவில் 2 பேர் கைது

நெல்லையில் புறநகர் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட பகுதிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் தலைமை ஏஜெண்டாக செயல்பட்ட சுத்தமல்லியை சேர்ந்த மனோகர், மாயாண்டி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News March 6, 2026
நெல்லை: 30 பேர் படுகொலை – பகீர் தகவல்!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.
News March 6, 2026
நாங்குநேரி சம்பவத்தில் அரசியல் பின்னணி உள்ளதா? – திருமா

நெல்லை வருகை தந்த திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்:- நெல்லை மாவட்டம் நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா? என கண்டறிய வேண்டும். போதை பழக்கம் மட்டும்தான் காரணம் என்றாலும் அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் பேட்டி அளித்தார்.
News March 6, 2026
நெல்லை காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர காவல் துறையின் கீழ், மாநகர பகுதிகளான நெல்லை டவுண், பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மருத்துவக்கல்லூரி, மேலப்பாளையம், பெருமாள்புரம் ஆகிய இடங்களில் காவல் நிலையங்களின் எல்லைகளில் இன்று (மார்ச்.5) இரவு ரோந்து பணி அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. திருநெல்வேலி டவுண் சரகம் உதவி ஆணையர் இளவரசன் ரோந்து பணிகளை மேற்பார்வையிடுவார்.


