News December 10, 2025

நெல்லை மக்கள் கவனத்திற்கு..!

image

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (டிச 10) நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெறும் என ஆணையர் மோணிகா ரானா நேற்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் வார்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிடலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 11, 2025

நெல்லை: வாக்காளர்களே.. இன்றே கடைசி!

image

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <>இங்கு கிளிக்<<>> செய்யவும். இதனை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 11, 2025

நெல்லை: குறைந்த வட்டியில் கடன்.. போலீஸ் எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில், தொலைபேசி மூலம் அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து SMS அல்லது அழைப்பு வாயிலாக பிரபல நிதி நிறுவனத்தில் உங்களுக்கு மிக குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும் எனவும் அதற்கு நீங்கள் தகுதி உள்ளவர்களாக இருப்பதாக கூறி கடன் வழங்குவதாக ஆசை காட்டி பல்வேறு வகைகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

News December 11, 2025

நெல்லை மின்வாரியம்; மழைக்கால எச்சரிக்கை அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பில் பொதுமக்களுக்கு தினமும் விழிப்புணர்வு எச்சரிக்கை தகவல்களை இணையதள பக்கம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஒருபோதும் ஈர கைகளால் சுவிட்சுகளை இயக்கக் கூடாது அது விபரீத ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவுறுத்தி உள்ளனர்.

error: Content is protected !!