News September 21, 2025

நெல்லை மக்களே: மின் கட்டணம் இப்படி செலுத்துங்க

image

நெல்லை மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்! <>TNEB செயலி<<>> அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். SHARE பண்ணுங்க!

Similar News

News November 11, 2025

நெல்லை அரசு பஸ் டிரைவர்களுக்கு நிர்வாகம் அறிவுரை

image

வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளதால் அரசு ஓட்டுநர்கள் பயணிகள் பாதுகாப்பு கருதி கவனமுடன் பஸ்களை இயக்க வேண்டும் என நெல்லை அரசு போக்குவரத்து அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மழை நேரத்தில் சுரங்கப்பாதையில் நீர் தேங்கி இருந்தால் மாற்று பாதையில் செல்ல வேண்டும். தரைப்பாலங்களுக்கு மேல் தண்ணீர் செல்லும் போது அந்தப் பாதையில் பஸ்சை இயக்க கூடாது போன்ற அறிவுரைகளை வழங்கினர்.

News November 11, 2025

நெல்லையில் 6 இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு

image

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணு மின் நிலையம், ஐ என் எஸ் கட்டபொம்மன், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட ஆறு முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்க டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி அறிவுறுத்தியுள்ளார். நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரவு ரோந்து பணியில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 11, 2025

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரூம் அதிகாரிகள் நியமிப்பு

image

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டு வகையிலும் பாதுகாப்பு முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலும் திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேர ரோந்து அதிகாரிகளை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி நியமித்துள்ளார். திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிகாரிகள் ரோந்து பணிகளையும் கண்காணிப்பு பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர்

error: Content is protected !!