News November 10, 2025
நெல்லை போலீஸ் தேர்வில் 691 பேர் ஆப்சென்ட்

நெல்லையில் போலீஸ் பணிக்கு நடைபெற்ற எழுத்து தேர்வு அமைதியாக நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் அனுமதிக்கபட்ட 4905 பேரில் பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை உள்பட 4214 பேர் தேர்வில் பங்கேற்றனர். தேர்வில் பங்கேற்காதவர்கள் 691 பேர் என எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார். மூன்று தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
Similar News
News November 10, 2025
நெல்லை: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

நெல்லை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 10, 2025
நெல்லை: 500 கிலோ வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் ஆளில்லாத வீட்டில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த ஆளில்லாத வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக 500 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 10, 2025
நெல்லையில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி

தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், ஐஸ்வர்யா ஸ்ரீ கல்வி நிறுவனம், திருநெல்வேலியில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்படும். பயிற்சிக்காலத்தில் மொத்தம் ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ. 11 இறுதி நாள். விபரங்களுக்கு 90250 79679 தொடர்பு கொள்ளவும்.


