News January 3, 2026
நெல்லை போலீஸ் அதிரடி அறிவிப்பு

‘திருநெல்வேலி மாநகர பகுதிகளில், இன்று (ஜன.3) அதிகாலை முதல் 15 தினங்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டஙகள், மறியல்கள், போராட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவை நடத்திட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை நெல்லை மாநகர காவல் ஆணையர் முனைவர் N.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் அமைதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த நடைமுறை செயல்பாட்டுக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
நெல்லை: கார் மோதி பரிதாப பலி!

நாங்குநேரி கோர்ட்டு பகுதியை சேர்ந்த சன்முகசுந்தரம் (38) நாங்குநேரி சுங்கச்சாவடியில் ஊழியராக பணியாற்றினார். இவர் டூவீலரில் நங்குநேரி நம்பி நகர் அருகே சென்ற போது அவ்வழியாக வந்த கார் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
News January 24, 2026
நெல்லை: வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டூர் பகுதியை சேர்ந்த முஸ்தபா மகன் கலீல் ரகுமான்(50). இவர் அதே பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பெண் கொடுத்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரகுமானை கைது செய்தனர்.
News January 24, 2026
நெல்லையப்பர் கோயில் உண்டியல் விவரம் அறிவிப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இன்று நடைபெற்ற 22 நிரந்தர உண்டியல்கள் திறப்பில் ரூ.23,47,066 ரொக்கமும், 15 கிராம்.100 மி.கிராம் எடையுள்ள பல மாற்றுப் பொன் இனங்களும், 171 கிராம் 800 மி.கிராம் எடையுள்ள பலமாற்று வெள்ளி இனங்களும் மேலும் வெளிநாட்டுப் பணத்தாள்கள் 110ம் கிடைக்கப்பெற்றன என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


