News October 3, 2025

நெல்லை போலீசார் அதிரடி – 105 பேர் கைது

image

நெல்லை போலீஸ் சுப்பிரண்டு சிலம்பரசன் தெரிவித்துள்ளாதவது: சாதி சார்ந்த பிரச்னைகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் சாதிய உணர்வுகளை தூண்டி சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறது. ஆபத்தான ஆயுதங்களை காட்டும் பதிவுகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கபட்டு 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 105 பேர் கைது செய்யபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Similar News

News October 3, 2025

நெல்லை: தசரா திருவிழா 100 பேருந்துகள் இயக்கம்

image

திருநெல்வேலியில் இருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவிற்காக 100 சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய இடங்களில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்கள் நெரிசலின்றி பயணிக்க, போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

News October 3, 2025

நெல்லை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக்<<>> செய்து Grievance Redressal, நெல்லை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க..

News October 3, 2025

நெல்லை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். Share பண்ணுங்க..

error: Content is protected !!