News December 27, 2025

நெல்லை: போலீசாரை தாக்கிய இருவர் கைது

image

பாளை தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின் தலைமையில் காவலர் கார்த்திக் ராஜா, அரியகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிகுளம் பாலசுந்தர் என்பவர் வந்த ஆட்டோவை நிறுத்திய போது காவலர் கார்த்திக் ராஜாவை தனது தந்தை சகோதரருடன் சேர்ந்து தாக்கினார் இது குறித்து போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிந்து பாலசுந்தர் அவரது சகோதரர் கனகராஜை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 28, 2025

நெல்லையில் பயங்கரம்., தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை!

image

விக்கிரசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (47). இவர் மைக்செட் அமைத்துக்கொடுக்கும் தொழிலாளியாக இருந்தார். இவர் நேற்றிரவு அதே பகுதியில் சென்ற போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தவலறிந்து வந்த அம்பை போலீஸார் உடலை கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 28, 2025

நெல்லையில் குவிக்கப்படும் போலீஸார்!

image

ஜன. 1ம் தேதி உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. நெல்லை மாநகர் பாளை, முருகன் குறிச்சி, டவுன், தச்சநல்ல்லூர் உள்ளிட்ட பகுதியில் தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது போதையில் பைக் ரேஸில் ஈடுபடுகின்றனர். அன்றைய தினம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மாநகரில் 500 போலீசாரும், மாவட்டத்தில்1,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

News December 28, 2025

நெல்லை: ஆட்டோ திருடிய இளைஞர் கைது

image

பாளையங்கோட்டை முருகன் குறிச்சியை சேர்ந்தவர் துரை பாண்டி (43). இவரது லோடு ஆட்டோவை தனது இரவு வீட்டு முன் நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது அது காணாமல் போனது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து இவர் அளித்த புகாரின் படி லோடு ஆட்டோவை திருடி சென்ற தென்காசி மாவட்டம் கருவந்தா சோலைச்சேரியைச் சேர்ந்த தீரன் மாடசாமி (37) என்பவரை நேற்று பாளை போலீசார் கைது செய்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!