News September 5, 2025

நெல்லை: போலி இணையதளம் எச்சரிக்கை

image

பிரதமர் திட்டத்தின் பெயரில் போலி இணையதளங்கள் செயல்படுவதாகவும், முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் செயல்பட வேண்டும் என நெல்லை இபிஎப்ஓ தனது எக்ஸ் பக்கத்தில் எச்சரிக்கை பதிவு வெளியிட்டுள்ளது. அதில் சுகாதாரம், கல்வி, ரயில்வே போன்ற 12 துறைகளில் ஆள்சேர்ப்பு நடப்பதாக விண்ணப்பங்களை கோறுகின்றன. இதை நம்பி தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். திட்டங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமற்ற இணையதளத்தை கண்டு ஏமாற வேண்டாம்.

Similar News

News April 10, 2026

நெல்லை : டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

image

நெல்லை மாவட்ட பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> க்ளிக்<<>> செய்யவும். இந்தத் தகவலை டிகிரி முடித்த அனைவருக்கும் உடனே SHARE IT

News April 10, 2026

நெல்லை: டிகிரி போதும்.. ரூ.1,05,280 சம்பளத்தில் வங்கி வேலை

image

இந்தியன் வங்கியில் Specialist Officers (SO) பதவிக்கான 350 காலியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech, MBA, CA/CMA/CFA படித்த 22 – 45 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.48,480 – ரூ.1,05,280 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஏப்.,28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News April 10, 2026

நெல்லை: 5 தொகுதிகளுக்கு இத்தனை பேர் போட்டியா?

image

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்.30ல் தொடங்கி ஏப்.,6 வரை நடந்தது. இந்நிலையில் நேற்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் நெல்லை – 20, ராதாபுரம் – 23, அம்பை – 5, நாங்குநேரி – 25, பாளை-17 என மொத்தம் 90 வேட்பாளர்கள் போட்டியிடுகிறனர். இதில் சுயேச்சையாக மட்டும் 48 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

error: Content is protected !!