News December 29, 2025

நெல்லை: பேருந்து மோதி சம்பவ இடத்தில் பலி!

image

கங்கைகொண்டான் சிப்காட் அருகே ஆலடிப்பட்டியில் இருந்து 2 பேர் நேற்று பைக்கில் சென்றனர். அப்போது குமரியிலிருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ், பைக் மீது மோதியது. இதில் பைக்கில் வந்த ஓட்டப்பிடாரம் முனியசாமி 36 சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற உலகநாதன் படுகாயம் அடைந்தார். அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News December 31, 2025

நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

image

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் மகன் தமிழரசன்(25) என்பவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவை அடுத்து அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

News December 30, 2025

நெல்லை: 16 ரவுடிகள் முன்னெச்சரிக்கையாக கைது

image

2026 புத்தாண்டு நாளை இரவு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்தியுள்ளனர். இதில் 1345 ரவுடிகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். மேலும் மாநகரில் 10 ரவுடிகளும், மாவட்டத்தில் 16 ரவுடிகளும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!